Monthly Archives: October 2023

A great initiative by Ekkuni Hatti

A great initiative by Ekkuni Hatti

Photos & info courtesy – J Krishnan

Seemeiya Madhippu

Seemeiya Madhippu – சீமெய மதிப்பு

by Dr. R.K Haldorai


Hanadha Seemey ஹணத சீமெ – Thodhanaadu தொதநாடு
Addadha Seemey அட்டத சீமெ – Porangaadu பொரங்காடு
Aagadha Seemey ஆகத சீமெ – Mekku naadu மேக்கு நாடு
Aarukaasuna Seemey ஆருகாசுந சீமெ – Kundhey குந்தெ

[குறிப்பு: அண= நாக்கு பெள்ளி; அட்ட = எரடு பெள்ளி; ஆக = ஒந்து பெள்ளி; ஆருகாசு = ½ பெள்ளி]


தொதநாடு என்பதற்கு தொட்ட நாடு என்ற ஒரு பெயர் உண்டு. அதாவது இது பெரிய நிலப்பரப்பு அடிப்படையில் மற்ற மூன்று சீமைகளைக் காட்டிலும் அதிகமாக நிலவரி செலுத்தும் சீமையாக இருந்துள்ளது. ஆகையால் இதனை ஹணத சீமை என்று குறிப்பிட்டுள்ளனர். இங்கு ஓர் ஹண என்பது நான்கணா காசைக் குறிக்கும். இதற்கு அடுத்தபடியாகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டது பொரங்காடு. தொதநாட்டினை நோக்க பொரங்காடு சற்றேறக்குறைய பாதியளவு நிலப்பரப்பைக் கொண்டது. ஆகையால் ஓர் ஹணவின் பாதியான அட்ட என்ற அடையுடன் அதனைக் குறிப்பிட்டுள்ளனர். அட்ட என்பதற்கு இரண்டு என்பது பொருள். பொரங்காட்டில் பாதியளவாக இருக்கும் மேக்குநாட்டை ஆகத சீமை எனக் குறிப்பிள்ளனர். ஆக என்பதற்கு ஒரு வெள்ளி என்பது பொருள். இருக்கும் நான்கு சீமைகளுள் சிறிய நிலப்பரப்பைக் கொண்டது குந்தை. அதனால் ஆகவின் பாதியாக ஆரு காசு என்ற
அடையுடன் குறித்துள்ளனர். “குந்தெய கூட்டி நாக்கு பெட்ட” என்னும் சொலவடையின் மூலமும் குந்தையின் குறைந்த நிலப்பரப்புத் தன்மை உணர்த்தப்படுவதைக் காணலாம்.