
If we have to name some Badagas who have done a great deal of research on Badaga, people and language, Dr.Haldorai’s name will , probably, be on the top. Though his writings have a distinct Tamil slant, let us not forget that he is a recognised Tamil Pandit and has been honoured by the Tamil Nadu government. He is proficient in Kannada also.
Based at Chennai, he is the main trustee of Nellikolu Trust and published many books.. He is from Mel Kauhatti and married to a lady from Hubbathalai (Ooru). I have interacted with him a few times, he is very simple, honest and unassuming. Great pleasure to share some of his recent articles sent to me by Dr.Haldorai himself. – Wg.Cdr.JP
சிக்குவார
படகுமொழியில் ஆதிவார, சோவார, மங்கவார, 0பொதவார, சிக்குவார, 0பெள்ளி, சநிஎன்பன வாரத்து ஏழு நாள் பெயர்கள். பொதுவாக, வாரத்து நாள்பெயர்கள் ஞாயிறு (Sun), திங்கள் (Moon), செவ்வாய் (Mars), புதன் (Mercury), வியாழன் (Jupitar), வெள்ளி (Venus), சனி (Saturn) ஆகிய கோள்கள் அடிப்படையில் பெயர் பெற்றனவாக இருக்கின்றன.
ஆனால் படகுவில் வியாழனுக்குரிய நாளாக வரும் சிக்குவார என்பது வியாழன் கோள் அடிப்படையில் பெற்ற பெயராகத் தெரியவில்லை. மாற்றாகச் சுக்கிரன் என்னும் பெயர் அடிப்படையில் பெற்ற பெயராகத்தான் தோன்றுகிறது. வெள்ளி, சுக்கிரன், என்பன ஒரே கோளுக்கு அமைந்த இரு பெயர்கள். படகுமொழி 0பெள்ளி என்பதை வெள்ளிக் கிழமைக்குக் கொண்டுள்ளது. இது லையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள வெள்ளி (Friday) என்பதுபோல் உள்ளது படகுமொழி வியாழனைக் குறிக்க வெள்ளிக்கான இன்னொரு பெயரான சுக்கிரன் என்பதைக் கொண்டுள்ளது. சுக்கிரன் என்னும் பெயர் அடிப்படையில்தான் கன்னடம் (சுக்ரவார), தெலுங்கு (சுக்ரவாரம்) ஆகிய மொழிகளில் வெள்ளிக்கிழமை குறிக்கப்படுகின்றது. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெள்ளியைக் குறிக்க வரும் சொல் படகுவில் வியாழனைக் குறிக்க வந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
இது படகுமொழியில் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வியாழக்கிழமையைக் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முறையே குருவார, குருவாரமு என்றழைக்கின்றனர். குரு என்பது வியாழனுக்கு அமைந்த பெயர். வியாழனைத் தேவகுரு (The planet Jupiter, as the priest of the gods) என்றும் வெள்ளிக்கு
அமைந்த பெயரான சுக்கிரனை அசுரகுரு (Venus, as preceptor of the Asuras) என்றும் அழைக்கின்றனர்.
படகு மொழியில் சிக்குவார என்பதைச் சில இடங்களில் சிக்கவார என்றும் அழைக்கின்றனர். சிக்குவார, சிக்கவார ஆகிய இரண்டும் சுக்கிரன் என்னும் சொல்லோடு பொருத்திப் பார்ப்பதற்கு இடம் தருகின்றன. இச்சொற்கள் சுக்கிரன் என்னும் பெயர் அடைப்படையில் பெற்ற பெயர்களாகத்தான் இருக்க வேண்டும் எனத் துணிய வேண்டியுள்ளது. அப்படியானால் வியாழன் கோளுக்கான பெயரைத் தவிர்த்து வெள்ளிக்கோளுக்கான வேறொரு பெயரை வியாழனுக்குக் கொண்டதற்கான
கரணத்தை ஆராய வேண்டியுள்ளது. வியாழனுக்குரிய தேவ குருவைத் தவிர்த்து அசுரகுருவான சுக்கிரனுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இவ்வாறு அமைந்துள்ளனர்
போலும்.
******************************************
0பாநுந மீநுகொ கூட்ட
(நட்சத்திரக் கூட்டம் Lunar constellation) -27
அசுவனி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்,
ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம்,
கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், பூரட்டாதி,
உத்திரட்டாதி, இரேவதி என்பவை இருபத்தேழு நட்சத்திரங்கள்
இருபத்தேழு நட்சத்திரங்களுக்கான படகுப்பெயர்கள்:
0பாநுந மீநுகொ (விண்மீன்கள்) – 27
- குதரெ: அசுவினி (புரவி) The first star, whose configuration looks as if it were a horse
- ஒலெ: பரணி (அடுப்பு) The second star, whose configuration looks as if it were an oven
- ஆரலு: கார்த்திகை (ஆரல்) The constellation Pleiades, whose configuration looks as if it were
an entity of six - 0பண்டி: உரோகணி (சகடு) The 4th star, whose configuration looks as if it were a cart
- மாநுதலெ: மிருக சீரிடம் (மான்தலை) The fifth star, whose configuration looks as if it were
head of a deer - செம: திருவாதிரை (சிவன், மூதிரை) The sixth star, whose configuration looks as if it were
Hara, ‘Šiva’ - 0பிதிலு: புனர்பூசம் (கழை) The seventh star, whose configuration looks as if it were bamboo
- கொரடு: பூசம் (கொடிறு) The 8th star, whose configuration looks as if it were pincers
- ஆவு: ஆயில்யம் (அரவு) The 9th star, whose configuration looks as if it were a snake
- நொக: மகம் (கொடுநுகம்) The 10th star, whose configuration looks as if it were a yoke
- அம்பு: பூரம் (கணை) The 11th star, whose configuration looks as if it were an arrow
- சரமொர: உத்திரம் (உத்தரம்) The 12th star whose configuration looks as if it were a rafter
- கய்: அத்தம் (கை) The 13th star, whose configuration looks as if it were an hand
- 0பட்டெ: சித்திரை (அறுவை) The 14th star, whose configuration looks as if it were a cloth
- 0தீவிகெ: சுவாதி (விளக்கு) The 15th star, whose configuration looks as if it were a lamp
- மொர: விசாகம் (முறம்) The 16th star, whose configuration looks as if it were a winnow
- பநெ: அனுடம் (பனை) The 17th star, whose configuration looks as if it were palmyra-palm tree
- 0பிந்ந 0பீசலு: கேட்டை (துளங்கொளி) The 18th star, whose configuration looks as if it were bright light
- மரி: மூலம் (குருகு) The 19th star, whose configuration looks as if it were young of a beast or bird
- ஒடெகொள: பூராடம் (முற்குளம்) The 20th star, whose configuration looks as if it were a breached tank
- கடெகொள: உத்திராடம் (கடைக்குளம்) The 21st star, whose configuration looks as if it were end of a tank
- மூருகோலு: திருவோணம் (முக்கோல்) The 22nd star, whose configuration looks as if it were end of a trident staff
- காக்கெ: அவிட்டம் (காக்கை) The 23rd star, whose configuration looks as if it were a crow
- செக்கு: சதயம் செக்கு The 24th star, whose configuration looks as if it were an oil-press
- ஹொணெ: பூரட்டாதி (நாழி, உள்துளையுள்ளது) The 25th star; whose configuration looks as if it were a tubularity
- தம்பட்டெ: உத்திரட்டாதி (முரசு) The 26th star, whose configuration looks as if it were a drum
- தெப்ப: ரேவதி (படகு,தோணி) The 27th star, whose configuration looks as if it were a boat
*****************************
ஓரியலொழுங்கு (beautiful and philosophical regularity)
