Monthly Archives: May 2024

Old Prayer of Porangaadu Seemay

பொறங்காடு சீமெயினரின் புராதன பிரார்த்தனை

தலெமலெ சீமெந்த
எல்லெ மலெ அசெகு
நாக்குபெட்ட நெடுபெட்டகு
நீலகிரிய நிதிபெட்டக
கர்த்த ஹெரயோடய்யக
எலெ கண்ணாடி, ஜுய்யி கிண்டி,
ஜெ 0கண்டெ, எரெசி மக்கிரி ஹொத்து
சரண மாடிநெயொ

மேற்கண்ட பிரார்த்தனையைத் தவறாகப் புரிந்துக்கொண்டு, தலெமலை யிலிருந்து படகர் நீலகிரிக்கு வந்ததாகப் பழைய மேற்கத்திய குறிப்புகளில் சொல்லப்பட்டு வந்தது. மேற்கண்ட சுலோகத்தின் சரியான மொழிபெயர்ப்பு கீழ்க்கண்டதாகும்.
தலெமலெ (தெங்குமொரஹாட மலைத்தொடர்) சீமெ முதல், எல்லெ மலெ (கூடலூர்)
வரையிலும் (அசெகு) நெடிதுயர்ந்துள்ள நாக்குபெட்ட என்னும் நீலகிரி நிதிபெட்டாவைக்
காக்கும் ஹெரயோடய் யாவுக்கு எலெ கண்ணாடி, ஜுய்யி கிண்டி, ஜெ 0கண்டெ, எரெசி மக்கிரி கியனவற்றைச் சுமந்து சென்று சரணமடைகின்றோம்.
ஹெரயோடய்ய என்றால், நம்மை பெற்றெடுத்த, நம்மை உடைமை யாகக் கொண்ட முன்னவன் என்பது பொருள். இதே போன்று ஹெரோமாசி என்றால் நம்மைப் பெற்றெடுத்த முன்னவள்என்பது பொருள். ஹெரோமாசி என்பது சுருங்கி மாசி (ஈரமாசி என்று இன்றைய காலங்களில் அழைக்கப்படுபவர்) என்றுள்ளது. ஆனால் இவர்களைத் தம்பதியராகக் கொள்ளுதல் தவறு.
ஹெரோ-து என்பதற்குப் பெற்றெடுத்தல் என்பது பொருள் என்தனை அறிவோம். பிறை
உடையோன் என்ற தமிழ்ப் பதத்திற்கும், பெற்றெடுத்தல் என்ற படகப் ருண்மைக்கும்
எந்தவித தொடர்பும் இல்லை என்பது குறிக்கற்பாலது.

பி. கே மல்லி, கோத்தகிரி