Rao Bahadur HB Ari Gowder 53rd Death Anniversary

Rao Bahadur HB Ari Gowder
(4 Dec 1893 – 28 Jun 1971)
Remembering with love, respect and reverence !









நீலகிரி கூட்டுறவு சங்கத்தை உருவாக்கிய ஆரிகவுடர்… 53வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு... tamil.news18.com/
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட்டுறவின் தந்தை எனப் போற்றப்படும் H.B. ஆரிகவுடரின் 53ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது.
ஆரிகவுடர் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தாலுக்காவில் உள்ள உபதலை என்னும் ஊரில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிறந்தார். ஆரிகவுடரின் தந்தை H.J.பெள்ளிகவுடர் தான் யுனெஸ்கோவால் “பாரம்பரிய புகைவண்டி” என அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலுக்காக, குன்னூர் முதல் ஊட்டி வரை தண்டவாளம் அமைத்த ஒப்பந்ததாரர் ஆவார்.
சந்தைப்படுத்துதல் முறையை முதன்முதலில் கூட்டுறவுத் துறையாக உருவாக்கிய ஆரிகவுடர் இந்தியக் கூட்டுறவு அமைப்பில் சந்தைப்படுத்துதல் துறையின் தந்தையாக விளங்குகிறார். குறிப்பாக மலை காய்கறிகள் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கான விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்திட இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் என்.சி.எம்.எஸ் என்று போற்றப்படும்,
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தினை நிறுவியவரும் இவரே ஆவார்.
இந்நிலையில் இன்று ஆரிகவுடரின் 53ஆம் ஆண்டு நினைவுநாள் ஊட்டி என்.சி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
தினமலர் – ஜூன் 29, 2024
ராவ்பகதுார் ஆரிகவுடரின் 53வது ஆண்டு நினைவு நாள்
ஊட்டி:ஊட்டியில் என்.சி.எம்.எஸ்., நிறுவனர் ராவ்பகதுார் ஆரிகவுடரின், 53வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஆரிகவுடர் நினைவு விழா குழு நிர்வாகி, படுக தேச பார்ட்டி நிறுவனர் மஞ்சை மோகன் தலைமை வகித்தார். ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்.சி.எம்.எஸ்., முன்னாள் தலைவர் கண்ணபிரான் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, என்.சி.எம்.எஸ்.,வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஆரி கவுடரின் தங்கை மகன் ஜெயப்பிரகாஷ் மற்றும் தாரா ஜெயப்பிரகாஷ் ஆகியோரை கவுரவித்தார்.
இதில், முன்னாள் நாக்குபெட்டா தலைவர் அய்யாரு, விவசாய சங்க செயலாளர் ரங்கசாமி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் தயாளன், என்.சி.எம்.எஸ்., மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Thanks to Dinamani, Dinamalar – June 29, 2024
நீலகிரி – திரு.H.B .ஆரிகவுடர் அவர்கள் நினைவு தினம். ஆட்சியர் மரியாதை செலுத்தினார் – தமிழக குரல் – நீலகிரி
https://nilgiris.tamilagakural.com/2024/06/hb.html?


Information and photos – Courtesy Manjai Mohan
.
Discover more from Badagas of the Blue Mountains
Subscribe to get the latest posts sent to your email.






Mookuthi
Chinna






==




![Seemae [See'may] & Morae [Mo'ray] (relationship)](https://i0.wp.com/badaga.wordpress.com/files/2008/11/nakku-betta1.jpg?resize=200%2C200)







































