Rao Bahadur H B ARI GOWDER, the undisputed Badaga leader

Rao Bahadur H B Ari Gowder, the undisputed Badaga leader

Ari Gowder

Rao Bahadur H.B.Ari Gowder

Birth anniversary 4th December

Ari Gowder2

[ Ref : Hockings, Paul; Christiane Pilot-Raichoor (1992). A Badaga-English Dictionary. Walter de Gruyter. p. 47. ISBN 311012677X, ISBN 978-3-11-012677-8]

Mrs.Tara Jayaprakash, Ari Gowder’s grand daughter and Veteran Wing Commander Bellie Jayaprakash, Ari Gowder’s nephew paying homage to Ari Gowde’s statue at NCMS Complex at Ootacamund..

Rao Bahadur Ari Gowder established Nilgiris Cooperative Marketing Society (NCMS) to help out the small potato growers, mainly Badagas from the exploits of middlemen in 1936. He purchased the land, about 6 acres, in the prime area near the Collectorate in Ooty with his own money and donated it to the Society. The complex is worth more than Rs,2000 crores now. He also established a branch of NCMS at Mettupalayam with about 14 acres of land purchased and donated.

Rao Bahadur H.B.Ari Gowder, the first Badaga graduate and the first Badaga M.L.C & M.L.A for a long time who had brought many reforms in/to Badaga Community including ‘prohibition’ (no alcohol – kudi) to Nilgiris in British days itself. Ari Gowder lead the Indian contigent (yes, “INDIAN CONTIGENT) to World Scouts Jumboree held in Europe in the 1930s.

Being a great philanthrophist he had done a lot for the betterment of Badagas. He established Nilgiri Co-Op Marketting Society at Ooty, to save the small farmers-especially Badagas- from the exploits of middlemen & traders at Mandis in Mettupalayam.

He was the President of NCMS for more than 30 years, till his death and NCMS was considered one of the best co-op societies in India during his days. His statue has been erected in the NCMS compound in appreciation of his great work. Since he donated the land, the road in front of Mambalam Railway Station in Chennai (Madras) is named after him (known as Arya Gowder Street).

Rao Bahadur H B Ari Gowder is considered as the ‘ Uncrowned King ‘ of Nakku Betta by Badagas.

And, his son Rao Bahadur H.B.Ari Gowder, the first Badaga graduate, first Badaga M.L.C & M.L.A for a long time who had brought many reforms in/to Badaga Community including ‘prohibition’ (no alcohol – kudi) to Nilgiris in British days itself. Ari Gowder lead the Indian contigent (yes, “INDIAN CONTIGENT) to World Scouts Jumboree held in Europe in the 1930s.

godollopc.jpg

The postcard Ari Gowder received at Godollo, Hungary as Leader of Indian Contingent

Documentary on Rao Bahadur H B Ari Gowder released on 4th December, 2025

PODCAST

Listen to the PODCAST below

Pip: There are mountains, and then there are the Nilgiris — where the Badaga community has been keeping records, honoring ancestors, and occasionally making the rest of us look underprepared for our own history.

Mara: This episode, from Wg Cdr Bellie Jayaprakash, centers on one of those acts of honoring — a tribute to a figure whose life shaped the community in ways worth sitting with.

Pip: Let’s start with the man himself.

Ari Gowda — A Life Worth Remembering

Mara: The question this post puts in front of us is a simple but serious one: how do you mark a hundred and thirty-two years since someone was born, and make it feel like more than a date on a calendar?

Pip: The post answers that directly. The introduction frames it as a point of collective pride — “We feel extremely proud to present the following documentary on the life of Rao Bahadur H B Ari Gowder on this 132nd Birth Anniversary.”

Mara: That framing matters. This isn’t a dry archival note — it’s a community presenting something it made, about someone it considers worth the effort of a documentary. The pride in that sentence is doing real work.

Pip: A documentary is a particular kind of tribute. It means someone gathered footage, or photographs, or testimony — assembled a life into something watchable. That’s a significant act of preservation for any community’s history.

Mara: And the title “Rao Bahadur” is itself a signal. That was a formal honorific granted under British administration in India, typically for distinguished public service. Ari Gowder carrying that title tells you something about the scale of his standing — both within the Badaga community and in the wider civic context of his era.

Pip: So you have a man who earned formal recognition from the colonial administration, being honored a century and a third later by his own community, on film. That’s a long arc of regard.

Mara: The documentary is linked directly in the post — it’s the centerpiece, not a footnote. The written introduction is brief, but it’s clearly designed to hand the reader straight to the film.

Pip: Which is the right call, honestly. Some stories are better watched than summarized.

Mara: The Nilgiris have a way of producing figures whose lives carry that kind of weight — and the work of recording them is how communities stay legible to themselves across generations.


Pip: A hundred and thirty-two years, and someone still made the documentary.

Mara: That’s the thread worth following — how a community keeps its own record. More from the Blue Mountains next time.

We feel extremely proud to present the following documentary on the life of

Rao Bahadur H B Ari Gowder

The story of Ari Gowda

by Sriram V [The HinduChennai, May 1, 2012]

Ari Gowder was President of the Backward Classes League and leaned towards the Justice Party

The chances of anyone travelling down Ariya Gowda Road in West Mambalam, and stopping to wonder about the identity of the man who gave the thoroughfare its name, are slim. For when you are on Ariya Gowda Road, you are focused on getting out of the road alive, given its traffic.

He was not Ariya Gowda. He was HB Ari Gowder, a great visionary and leader of the Badaga community of the Nilgiris. And his life, as gleaned from various sources, including a 1935 Who’s Who and the internet, makes for interesting reading.

Rao Bahadur Hubbathalai J Bellie Gowder, made his fortune in laying the tracks of the Nilgiri Mountain Railway, which was completed in 1908. His wealth made him a leading member of his community, and his clansmen came to him for advice on several issues. Bellie Gowder founded a free school in his native village, Hubbathalai, an institution that still functions. He passed away in 1935.

Bellie Gowder’s son, Ari, was born in 1893. His father ensured that he was educated in the modern sense and he graduated from Madras Christian College. Though he was to consider himself a contractor and a planter, it was in politics and social uplift that Ari Gowder was to make a mark. In 1923, he became the first Badaga to be elected to the Madras Legislative Council of which he was a member until 1934. In the 1940s, he was elected to the Madras Legislative Assembly. When the Rajaji government introduced Prohibition in 1937, he led the challenge of enforcing it in the Nilgiris, of which area he was also the first non-official to become District Board President. Ari Gowder was also active in the Scouts Movement. Another contribution of his was the establishment of the Nilgiris Cooperative Marketing Society, which eliminated the stranglehold middlemen had over the simple mountain people. He was also a Director of the Badaga Land Mortgage Bank.

While the sympathies of most of his community lay with the Congress, Ari Gowder, given that he was President of the Backward Classes League, leaned more towards the Justice Party, which was active till the 1930s. That probably explains the road in Mambalam being named after him. Neighbouring Theyagaroya Nagar or T Nagar, developed in the 1920s when the Justice Party was in power and most of the roads, parks and streets there are named after its leaders. Legend also has it that a large chunk of land adjoining the Mambalam Railway Station was his, which he donated for developmental work. Like his father, Ari Gowder too received the title of Rao Bahadur from the British Government, in 1943.

In 1946, Ari Gowder was defeated in the Assembly elections. But in 1952 he contested successfully as an independent. He was to remain an independent for the rest of his career. He passed away in 1971.

How did Ari Gowder Road morph into Ariya Gowda Road? And should it not be just Ari Road?

The Hindu : Cities / Chennai : The story of Ariya Gowda.

++++++++++++++++++++++++++++

Life History Of Rao Bahadur H B Ari Gowder

திரு ராவ்பகதூர் ஹெச். பி. ஆரிகவுடர் பி. ஏ. அவர்களின் திவ்ய சரித்திரம்

ஆழ்கடல் முத்தென தோன்றிய சரித்திரம் டைத்த பெரி யோர்களுள் ஒருவராக விளங்கியவர் கீர்த்தி
ராவ்பகதூர்ஆரிகவுடர் ஒருவராவார். அவரது வாழ்நாளைய சரித்திரத்தைப் பற்றி சுருக்கமாக இதில் காண்போம்.

சாதனையாளரின் பிறப்பு :-

”தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றமை நன்று”

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க தோன்றியவர்தான் திரு. ஆரிகவுடர். நீலமலை வாழ் தெய்வீக குணம் மற்றும் ஞானம். சிறப்புமிக்க பொற்கால வாழ்வு கண்டவர் வழிவந்த படுக சமூகத் தின் முடிசூடா மன்னர் என்று போற்றப்பட்ட வள்ளல் ராவ்பதூர் எச்.ஜே.பெள்ளிகவுடர் அவர்கட்கும், செல்வ இலட்சுமி நஞ்சம்மாள் தம்பதிகளுக்கும் மகனாக 1893 டிசம்பர் 4-ம் நாள் தோன்றினார்.

இளமையில் கல்வி :-

இவர் தமது முதல் நிலை, நடுநிலை பள்ளிப் படிப்பை அருவங்காடு, குன்னூர் வட்டாரத்தில் தொடங்கினார். அன்று உயர் நிலைப்பள்ளி நீலகிரியில் இல்லாததனால் கோவை சென்று உயர் நிலைக்கல்வியினைத் தொடர்ந்தார்.
சென்னை இராஜதானி கல்லூரியில் 1912 முதல் 1918 வரை கல்வி பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். இவரே படுகர் சமூகத்தில் முதலில் பட்டம் பெற்ற கல்வியாளராகத் திகழ்ந்தார்.
இவரது சென்னை பட்டப்படிப்பானது சமூக சேவைக்கு வித்தாக அமைந்தது எனலாம்.

கல்லூரி வாழ்வில் சமூக அனுபவம் :

மக்கள் நெருக்கமும், பிரச்னைகளும் குறைந்த நீலமலையி னின்று கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்று கல்லூரி வாழ் வினை ஆரம்பிக்கையில் ஆரிகவுடர் அங்கு பெற்ற அனுபவங்கள்
ஏராளம்

கல்லூரியில் சக தோழர் இடையும் அரசு அலுவலகங் ளிலும் கோயில்களிலும் குடியிருக்கும் தெருக்களிலும் மற்ற ஏனைய பொது வாழ்விலும் தான் கண்டு வேதளைப்பட்ட நிகழ்ச்சி உயர் வகுப்பார் என்று தங்களை சொல்லிக்கொண்டு வரும் வகுப் பார்செய்த மனிதாபிமானம் அற்ற தீய செயல்களே. அதனைக் கண்டு அவர் மனம் வெதும்பினார்.
மனிதாபிமானமற்ற அச்செயல்களைக் கண்டித்து எல்லாச் சமூக மக்களுக்கும் சம உரிமை, சமவாய்ப்பு, சமவாழ்வு காண்பதே நீதி என்று மனதிற்கொண்டு, மேல்வகுப்பாரின் தீய எண் ணங்களை அடக்க ‘உயர்வகுப்பார் அல்லா கல்லூரி மாணவர் சங்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் உபதலைவராகவும், முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டார். இச்செயல் 1914-18ஆம் ஆ ண்டுகளில் நடைபெற்றதாகும்.
1920க்கு முன்னர் உயர்வகுப்பாரை எதிர்த்து இயக்கம் நடத்துவதென்பது எதிர்நீச்சலுக்கு ஒத்த காரியமாக இருந்தது.
அதுவரை எந்த மகாராஜாவோ, ஜமீன்தாரோ. மற்ற எவரும் ஏற்று நடத்த தயங்கிய காலம். அப்படிப்பட்ட அச்செயல் அவரால் நிகழ்ந்தது எங்ஙனம் எனில் உண்மை ஆன்மீகத்தின் தூய வழியில் வ வந்த படுக சமூக சக்தியால்தான் எனலாம். அந்த தூய சக்தியின் அதிர்ஷ்டம் ‘காகம் உட்கார பழம் விழுந்தாற்போல’ கல்லூரியில் உயர்வகுப்பார் எதிர்ப்பு மாணவ இயக்கம் துவக்குவதற்கும் வெளி யுலகில் உயர்வகுப்பார் அட்டூழியத்தை அடக்க முன்னின்று முனைந்த முதியவர்கள், திராவிட செம்மல்கள் திரு.சர்.பிட்டி. தியாகராயர் மற்றும் டி.எம்.நாயர் போன்ற சான்றோர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. இதனால் மாணவர் கட்கு சான்றோரின் உதவியும், சான்றோர்கட்கு மாணவர்களின் உதவியும் ஏற்பட்டது. அதன் பயனாக 1916-ல் தென்னிந்திய நல உரிமை சங்கமான நீதிக்கட்சியின் சார்பாக, சர்.பிட்டி தியாக ராயர் வெளியிட்ட நீதிக்கட்சியின் வரலாற்றுமுக்கியம் வாய்ந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இனத்திற்காக இயங்குதல் :-

1918-ல் அதாவது தனது 25-ம் வயதில் ஆரிகவுடர் தனது கல்லூரி படிப்பை முடித்தார். 1919முதல் தனக்கு உதவியாக நாடக ஆசிரியரும், சிறந்த சமூக சேவையாளருமான திரு பி.எஸ். ஜோதிகவுடரை தன் உதவியாளராக அமர்த்திக்கொண்டு படுகர் கிராமங்கள் தோறும் சென்று மக்களது நிலையை நேரில் அறிந்து வந்தார். இந்நிலையில் மாண்டே – செபிஸ் போர்டின் 1919-ம் ஆண்டு திட்ட சட்டத்தின் கீழ் மாகான ஆட்சிமன்றத்திற்குரிய இரண்டாவது தேர்தல் 1923-ல் வர அதில் திரு ஆரிகவுடர் சுயேச்சையாக நின்று அமோக வெற்றி பெற்றார். எதிர்த்து நின்றவர் வெறும் 7 ஓட்டுகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.

சட்டசபையில் நம்மவர் :-

நிவகிரி கிராமமக்களுக்காக தன்தந்தை ராவ்பகதூர் எச் பெள்ளிகவுடர் நினைவு உயர்நிலைப்பள்ளி ஒன்றை உபதலையில் ஏற்படுத்தினார். 1929-ம் ஆண்டு முதல் படுகர் மாணவர்களுக்கு பிரத்தியோகமாக உயர்நிலைப்பள்ளியில் இலவச உணவு மற்றும் இருப்பிட வசதி ஏற்படுத்தினார். இச்சலுகை அப்போது யாருக் கும் கிடைக்காதது. அச்சலுகை பின்னர் கல்லூரி படிப்பிற்கும் விஸ்தரிக்கப்பட்டது. இச்சலுகை இந்தியாவில் மற்ற எவ்வகுப்புக் கும் கிடைக்காதது. அதன் பயனாக ஆயிரக்கணக்கான படுக இன மாணவர்கள் கல்வி கற்க மிகவும் உதவியாகவும் இன்று காணும் முன்னேற்றதிற்குக் கார ணமாகவும் இருந்தது.
1927-ம் ஆண்டு அவர் மீண்டும் எம்.எல்.சி. யாக இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933-ல் அவர் மீண்டும் நான்காம் முறையாக மக்களால் எம்.எல்.சி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதி, நிர்வாக அமைப்பு பற்றி :-

1934 பிப்ரவரி மாதத்தில் அவர் சென்னை சட்டசபையில் நீதி நிர்வாக அமைப்புகள்’ தனித்தனியே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். இத்திட்டத்தினை உலகில் முதன்முதலில் குறிப் பிட்டவரும் இவரே எனலாம். இத்திட்டம் பற்றி இவர் 1934 பிப்ரவரியில் கூறியுள்ளார். அதன் பின்னர் தான் ஆங்கில சுப்ரீம் கோர்ட் நீதிபதி இங்கிலாந்தில் 1934 நவம்பர் மாதத்தில் இதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். நீதி நிர்வாகம் தனியே இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பிற்பட்டோர் சங்கம்:-

1935ல் இவர் சென்னை மாகாண பிற்பட்டோர் நல சங்கத் தினை ஆரம்பித்து அதன் ஆயுள் தலைவராகவும் விளங்கினார். இது பிற்பட்டோர் கல்வி வேலை வாய்ப்பு பற்றி கவனிப்பு சேவை சம்பந்தப்பட்டது. கல்வி மற்றும் உத்தியோக விஷயம், வகுப்பு வாரிச் சட்டம் அமுலாக்க இவர் சட்டசபை அங்கத்தினராக வந்ததும் விசேஷ கவனம் செலுத்தினார். அப்பொழுது தந்தை பெரியார், அண்ணா அவர்கள் உடன் கலந்து பல காரியங்கள் செய்திருக்கிறார்கள்.

நீலகிரி உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 1935-ல் ஏற்படுத்துதல்

நீலகிரி விவசாயிகளின் பொருளாதாரத்தின் மிக முக்கிய மான கிழங்கு சாகுபடி 1930 முதல் இரசாயன உரம் கிடைத்ததி லிருந்து அதிக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட் டது. ஆனால் விளைப்பொருளுக்கு சாகுபடி சிலவுக்கு தகுந்த கட்டுபடியான விலை கிடைக்காமல், வியாபாரிகளின் தந்திரங் களால் விவசாயிகள் துன்பப்பட்டன்ர்:
அதனால் கிராம நாணய சங்கங்கள் மூலம் கொடுக்கப்பட்ட கடனை திருப்பிக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை கிராம நாணய சங்க பிரதிநிதிகள் கே. பி. செவனாகவுடர் கெந்தரை மற்றும் எச்.பி. செவனாகவுடர் (ஓர்நள்ளி.) அவர்கள் மூலம் அறிந்த ஆரிகவுடர் நமது சமூக தலைவர்களான துனேரி மணியகாரர் ஜோகிகவுடர், திரு பி. கே. நந்திகவுடர். கெச்சிகட்டி, டி.எம்.i
ராமாகவுடர் தாவணை, திரு டி.பி. லிங்ககவுடர் தாவணை, திரு எம்.கே.பெள்ளிகவுடர் கேத்தி. ஆகிய முக்கிய தலைவர் களையும் மேலும் கூட்டுறவு சேவை ஆளர்கள் ஓசேலை கவுடர் இத்தலார். மணியகாரர் நஞ்சாகவுடர் அதிகாரட்டி, மணியகாரர் மாதாகவுடர், நஞ்சா நாடு, முணியகாடா. என். பெள்ளிகவுடர் (இப்பதிப்பாசிரியர்) மேலுார், கே. ஜோகிகவுடர், எடப்பள்ளி, மணியம் செவனாகவுடர், ஓரசோலை, மணியம் தோணகவுடர், அணிக்கொரை, எம்.ராமாகவுடர் குந்தைசப்பை, கக்கமல்லா கவுடர், நுந்ததுள, கர்ணம் மாதாகவுடர் கீழ்குந்தை, எஸ். மாதா கவுடர் எடக்காடு முதலியவர்களுடன் ஒரு நாள் உதகையில் கலந்து ஆலோசித்து முடிவு செய்தார். இது ஏற்கனவே 1912-ல் ஏற்பட்ட கிழங்கு விற்பனை சங்கம் தோல்வி ஏற்பட்டதால் ஆரிகவு டரிடம் உத்தரவாதம் கேட்டு கூட்டுறவு பதிவாளர் உருளைகிழங்கு ற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்கம் பதிவு செய்தார்.
இந்த சங்கத்திற்கு திரு ஆரிகவுடரையே முதல் தலைவ ராக கூட்டுறவு ரிஜிஸ்ட்ரார் நியமித்தார்.
அதனை நாணயத்தோடும், கண்ணும் கருத்துமாகவும் செயல்படுத்தினார். இடையில் வியாபாரிகளாலும், அரசியல்வாதி களாலும் தடைகள் வந்தும் அவர் உண்மையான ஊக்கத்துடன் செயல்பட்டு மக்களின் ஆதரவு பெற்றிருந்ததால் தடை நீங்கி இந் தியாவிலேயே முதல்தரமான விவசாயிகள் விளைப் பொருட்களின் விற்பனை சங்கம் என்று அரசால் போற்றப்பட்டு, கேடயங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.

அன்று சில நூறு உறுப்பினர்களினால், சில ஆயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விற்பனை சங்கம் இன்று 22,000த் திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டதாகவும் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட பங்கு தொகை சேர்ந்ததாகவும் கோடிக் கணக்கில் ஆஸ்திப் பொறுப்பு உள்ளதாகவும் ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. இவ்வளர்ச்சி அடைய திரு ஆரியகவுடரின் தூய்மையான முயற்சியும் திறமையான நிர்வாகமும்தான் என்று கூறினால் மிகையாகாது.

அன்று இச்சங்கம் ஆரம்பிக்கும்போது கிராம நாணய சங் சங்கங்களின் பங்கு தொகை சேமிப்பு துகைகளிலிருந்து பெற்ற துகைக்குமேல் தனி விவசாயிகளிடமிருந்து பங்கு துகை பெற்று அங்கத்தினராக சேர்க்கப்பட்டது. அன்றைய பொருளாதார நிலையில் தனி நபர்களை பங்கு சேர்ப்பது கஷ்டமாக இருத்தது. இருந்தாலும் முதல் முதலில் கிராமங்கள்தோறும் சென்று பல அங்கத்தினர்களை சேர்த்த பெருமை, ஆரிகவுடருடன் அவர்கள் பொதுவாழ்வு நாட்கள் பூராவும் நெருங்கிப் பழகிய சமூக சேவை யாளர் திரு பெள்ளி கவுடர் (இக்கட்டுரையாளர்) அவர்களை சாரும் எனில் அது மிகை அன்று.

பொருளாதாரம்:

1925 முதல் நீலகிரி மாவட்ட கிராமங்களின் பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய கிராமங்கள் தோறும் சென்று தேயிலை தோட்டம் உண்டாக்க ஆவன செய்தார்.

சமதர்மம் :-

எந்த ரூபத்திலும் பெருமீன் சிறு மீனை முழுங்காதவகையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று, 1927-ல், ஆங்கில அரசால் சுதந்திரம் கொடுக்கும் நிலை பற்றி ஆராய அனுப்பிய லார்ட் சைமன் கமிஷன் முன் உதகையில் சாட்சியம் கூறுகையில் குறிப்பிட்டார். அனைவருக்கும் ஒத்த உரிமை, சம வாய்ப்பு. சமவாழ்வு கொடுக்க வேண்டும் என்னும் தன் எண் ணம் மற்றும் திட்டத்தை வற்புறுத்தி பேசியுள்ளார். அந்த நினைவையே பாமர மக்களின் உண்மைச் சுதந்திரம் என்றார். இஃது அவரது பரந்த மனப்பான்மையையும், சுதந்திரதாகத்தினை யும் சுட்டுகிறது எனலாம்.

ஜில்லா போர்டு தலைவராக ஊர் உத்தமர்கள் மெச்சிய சேவை :-

1929ல் மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினராகவும் (டிஸ்ட்ரிக் போர்டு மெம்பர்) அக்குழுவின் உதவி தலைவராகவும் இருந்தார். 1930-ம் ஆண்டில் ஜில்லா போர்டுக்கு அதிகாரிகள் அல்லாத பொது மக்கள் தலைவர் தேர்வு நடக்கும்போது ஆரிகவுடர் முதல் தலைவராக இருந்தார். அப்பதவியும் 1949 வரை நீடித்தது. 1937-ல் ராஜாஜி முதலமைச்சராக இருக்கும்போது அன்றைய சென்னை மாகாணத்தின் 26 ஜில்லாக்களின் நிர்வாகத்தில் நீலகிரி யில் ஆரிகவுடர் நிர்வாகம் முதல் தரமாகவும் தூய்மையானதாக வும் திறமையானதாகவும் உள்ளது என்று போற்றியுள்ளார்.
மேலும் ராஜாஜி அவர்கள் ஆரிகவுடரை நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து இம்மாதிரி நல்ல தூய்மையான செய்கைகளைச் செய்து காட்டி மற்றவர்களும் பின்பற்றச் செய்ய வேண்டும் என்று வேண் டிக்கொண்டார். இது முன்னாள் அமைச்சர் B. கோபால்ரெட்டி யின் கல்யாணத்தில் 1938ல் சொல்லப்பட்டது.

சிறு தேயிலை விவசாயிக்கு சேவை:-

சிறு தேயிலை தோட்ட விவசாயிகள் நலம் காக்கும் ஒரு சங் கத்தை 1929ல் ஏற்படுத்தி அதன் தலைவரானார். அப்பதவி அவ ரது இறுதி ஆண்டாகிய 1971 வரை நீடித்தது. தேயிலை அதிக மாகப் பயிரிடவும் செய்தார். 1931-ம் ஆண்டில் இந்தியா தேயிலை அனுமதி சங்கத்தை (இந்தியன் டீ லைசென்ஸ் கமிட்டி) மத்திய அரசு ஏற்படுத்தியது. அதற்கு அவரை சிறு தேயிலைத் தோட்டக்காரர்களின் பிரதிநியாக நியமித்தது. அப்பொழுது தேயிலை விலைச் சரிவால் ஏற்பட்ட கஷ்டத்தை நிவர்த்திக்க அரசு தேயிலை ஏற்றுமதி கோட்டா’ சட்டத்தைக்கொண்டு வந்தது. அதன்படி தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தாள் அனுமதியளித்தனர். ஆனால் சிறு தேயிலைத் தோட்டக் காரர்கள் அதனால் உதவி பெற இயலாது போகவே அவர்களுக்கு காக அரசிடம் வாதாடி அவர்களுக்கும் அந்த ஏற்றுமதி கோட்டா சட்டம் பயன்படும்படி செய்தார்.

நிலவள வங்கியில் சேவை:-

1930 முதல் நீலகிரியில் ‘நில அடமான வங்கி’ ஏற்படுத்தப் பட்டு அவர் அதன் தலைவராக 1930 முதல் 1946 வரை இருந் தார். தற்பொழுது அது ‘நிலவள வங்கி’ என்ற பெயரில்செயல் படுகிறது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கத்தின ராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அப்பொழுது தான் இந்திய பொருளாதார நிபுணர் டாக்டர் ஜே.சி.குமரப்பாவிடம் (காந்தியவாதி) இந்தியப் பொருளாதாரம் பற்றியும், நீலகிரியின் பொருளாதாரம் பற்றியும் பேசியுள்ளார். அப்பொழுது தான் ஜெ.சி.குமரப்பாவின் மூலம் தேசீய விடுதலைப்படைத் தலைவரா கிய ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய தீவிர காங்கிரஸ் வாதியின் தொடர்பு சிடைத்தது.

சாரண இயக்கத்தில் சேவை

நீலகிரி ஜில்லா சாரண இயக்கத் தலைவராக 25 ஆண்டு கள் சேவை. ஈடுபாட்டின் காரணமாக நீலகிரி மாவட்ட சாரண இயக்கத்தின் தலைவரானார். 1932இல் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக சாரணர் இயக்க மகாநாட்டிற்கு இந்திய சாரண இயக்க பிரதிநிதிகளின் தலைவ ராகச் சென்றார்.

அதுசமயம் அமெரிக்கா, ஜெர்மனி, இரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்தார்.

1936ஆம் ஆண்டில், சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் மந்திரி பதவி கிடைக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறப்பட்டபோதும் கூட, ஆரிகவுடர் சுயேச்சையாகவே இருந்து மக்கள் சேவை செய்யவே விழைந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி மந்திரி சபை அமைக்க ஆதரவு தருவேன் என்றார். 1935ஆம் ஆண்டு சட்டப்படி, 1936இல் நடந்த மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது, இந்தியாவையும் அதில் ஈடுபடுத்துவது பற்றி, காங்கிரஸ் கட்சி யுடன் ஆலோசிக்காது தன்னிச்சையாக ஆங்கிலேய அரசாங்கம் முடிவு எடுத்ததால், அதனை எதிர்த்து காங்கிரஸ் மந்திரிகள் விலகி விட்டனர். ஆனால் ஆரிகவுடரோ ஆங்கில அரசுடன் ஒத்துழைத் தால் தான், இந்திய மக்கள் சுதந்திரம் பெற முடியும் என்று அவர்களுடன் ஒத்துழைத்தார். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் நடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆரிகவுடர்
இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர், 1952ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக ஆரிகவுடரை எதிர்த்து தொழிலாளர் தலைவர் இராமநாயர் போட்டியிட்டார். அதில் ஆரிகவுடரே வெற்றி பெற்றார். அப்போது அவர் பொதுவாழ்வில் தமக்கிருந்த அரசியல் நிலைப்பாட்டை. தெளிவுபடுத்தினார். ‘நான் எந்தக் கட்சியிலும் அங்கத்தினரல்லவாயினும் எல்லாக் கட்சிகளிலு முள்ள நல்ல கொள்கைகளை ஆதரித்துப் பாராட்டுகின்றேன். வினோபாஜியின் சர்வோதய இயக்கத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். நாட்டிலே கட்சிகளுக்கு குறைவில்லை. எக்கட்சியா யினும் தன்மானத்துடனும் சுயநலமற்ற சேவை உணர்ச்சியுடனும் தேசபக்தியுடனும் இருக்க வேண்டும். நாளொரு மேனியாய் கொள்கை மாற்றம் கூடாது. பதவி வேட்டைக்காகவும் சுயநலத்திற் காகவும் கட்சிகளில் பங்கு கொள்கிறவன் தேசத்துரோகி ஆவான்’

சமூகத்திலிருந்த குடிப்பழக்கம்

சமூகத்திலிருந்த குடிப்பழக்கத்தைப் பற்றி அறிந்து அதன் தீமைகளை மக்களுக்கு உணர்த்தி படுகர் சமூக சட்டத்தின் படி மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தியும், மேலும் நீலகிரி மலை வாழ் மக்களாகிய படுகர்; தொதவர். கோத்தர், குரும்பர்களுக் கான பிரத்தியேகமான மதுவிலக்கு சட்டம் ஒன்று 1924-ல் அரசால் கொண்டுவரச்செய்து அதை அமுலாக்கி மலைவாழ் மக்களின் குடிப்பழக்கத்தை ஒழித்தார்.

கடன் நிவாரணம் :-

  1. மலைவாழ் மக்கள் லேவாதேவிக்காரர்களிடம் சிக்கி யிருக்கும் கடன் பளுவை குறைக்க அம்மக்கள் தனக்கு 1924-ல் கொடுத்த கணக்கின்படி உள்ள நான்கு இலட்ச ரூபாய் கடனை அரசே ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.

நிவகிரி கிராமமக்களுக்காக தன்தந்தை ராவ்பகதூர் எச் பெள்ளிகவுடர் நினைவு உயர்நிலைப்பள்ளி ஒன்றை உபதலையில் ஏற்படுத்தினார். 1929-ம் ஆண்டு முதல் படுகர் மாணவர்களுக்கு பிரத்தியோகமாக உயர்நிலைப்பள்ளியில் இலவச உணவு மற்றும் இருப்பிட வசதி ஏற்படுத்தினார். இச்சலுகை அப்போது யாருக் கும் கிடைக்காதது. அச்சலுகை பின்னர் கல்லூரி படிப்பிற்கும் விஸ்தரிக்கப்பட்டது. இச்சலுகை இந்தியாவில் மற்ற எவ்வகுப்புக் கும் கிடைக்காதது. அதன் பயனாக ஆயிரக்கணக்கான படுக இன மாணவர்கள் கல்வி கற்க மிகவும் உதவியாகவும் இன்று காணும் முன்னேற்றதிற்குக் கார ணமாகவும் இருந்தது.
1927-ம் ஆண்டு அவர் மீண்டும் எம்.எல்.சி. யாக இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொருளாதாரம்:

1925 முதல் நீலகிரி மாவட்ட கிராமங்களின் பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய கிராமங்கள் தோறும் சென்று தேயிலை தோட்டம் உண்டாக்க ஆவன செய்தார்.

சமதர்மம் :-

எந்த ரூபத்திலும் பெருமீன் சிறு மீனை முழுங்காதவகையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று, 1927-ல், ஆங்கில அரசால் சுதந்திரம் கொடுக்கும் நிலை பற்றி ஆராய அனுப்பிய லார்ட் சைமன் கமிஷன் முன் உதகையில் சாட்சியம் கூறுகையில் குறிப்பிட்டார். அனைவருக்கும் ஒத்த உரிமை, சம வாய்ப்பு. சமவாழ்வு கொடுக்க வேண்டும் என்னும் தன் எண் ணம் மற்றும் திட்டத்தை வற்புறுத்தி பேசியுள்ளார். அந்த நினைவையே பாமர மக்களின் உண்மைச் சுதந்திரம் என்றார். இஃது அவரது பரந்த மனப்பான்மையையும், சுதந்திரதாகத்தினை யும் சுட்டுகிறது எனலாம்.

ஜில்லா போர்டு தலைவராக ஊர் உத்தமர்கள் மெச்சிய சேவை :-

1929ல் மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினராகவும் (டிஸ்ட்ரிக் போர்டு மெம்பர்) அக்குழுவின் உதவி தலைவராகவும் இருந்தார். 1930-ம் ஆண்டில் ஜில்லா போர்டுக்கு அதிகாரிகள் அல்லாத பொது மக்கள் தலைவர் தேர்வு நடக்கும்போது ஆரிகவுடர் முதல் தலைவராக இருந்தார். அப்பதவியும் 1949 வரை நீடித்தது. 1937-ல் ராஜாஜி முதலமைச்சராக இருக்கும்போது அன்றைய சென்னை மாகாணத்தின் 26 ஜில்லாக்களின் நிர்வாகத்தில் நீலகிரி யில் ஆரிகவுடர் நிர்வாகம் முதல் தரமாகவும் தூய்மையானதாக வும் திறமையானதாகவும் உள்ளது என்று போற்றியுள்ளார்.

மேலும் ராஜாஜி அவர்கள் ஆரிகவுடரை நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து இம்மாதிரி நல்ல தூய்மையான செய்கைகளைச் செய்து காட்டி மற்றவர்களும் பின்பற்றச் செய்ய வேண்டும் என்று வேண் டிக்கொண்டார். இது முன்னாள் அமைச்சர் B. கோபால்ரெட்டி யின் கல்யாணத்தில் 1938ல் சொல்லப்பட்டது.

சிறு தேயிலை விவசாயிக்கு சேவை:-

சிறு தேயிலை தோட்ட விவசாயிகள் நலம் காக்கும் ஒரு சங் கத்தை 1929ல் ஏற்படுத்தி அதன் தலைவரானார். அப்பதவி அவ ரது இறுதி ஆண்டாகிய 1971 வரை நீடித்தது. தேயிலை அதிக மாகப் பயிரிடவும் செய்தார். 1931-ம் ஆண்டில் இந்தியா தேயிலை அனுமதி சங்கத்தை (இந்தியன் டீ லைசென்ஸ் கமிட்டி) மத்திய அரசு ஏற்படுத்தியது. அதற்கு அவரை சிறு தேயிலைத் தோட்டக்காரர்களின் பிரதிநியாக நியமித்தது. அப்பொழுது தேயிலை விலைச் சரிவால் ஏற்பட்ட கஷ்டத்தை நிவர்த்திக்க அரசு தேயிலை ஏற்றுமதி கோட்டா’ சட்டத்தைக்கொண்டு வந்தது. அதன்படி தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தாள் அனுமதியளித்தனர். ஆனால் சிறு தேயிலைத் தோட்டக் காரர்கள் அதனால் உதவி பெற இயலாது போகவே அவர்களுக்கு காக அரசிடம் வாதாடி அவர்களுக்கும் அந்த ஏற்றுமதி கோட்டா சட்டம் பயன்படும்படி செய்தார்.

நிலவள வங்கியில் சேவை:-

1930 முதல் நீலகிரியில் ‘நில அடமான வங்கி’ ஏற்படுத்தப் பட்டு அவர் அதன் தலைவராக 1930 முதல் 1946 வரை இருந் தார். தற்பொழுது அது ‘நிலவள வங்கி’ என்ற பெயரில்செயல் படுகிறது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கத்தின ராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அப்பொழுது தான் இந்திய பொருளாதார நிபுணர் டாக்டர் ஜே.சி.குமரப்பாவிடம் (காந்தியவாதி) இந்தியப் பொருளாதாரம் பற்றியும், நீலகிரியின் பொருளாதாரம் பற்றியும் பேசியுள்ளார். அப்பொழுது தான் ஜெ.சி.குமரப்பாவின் மூலம் தேசீய விடுதலைப்படைத் தலைவரா கிய ஸ்ரீ சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய தீவிர காங்கிரஸ் வாதியின் தொடர்பு சிடைத்தது.சங்கத்திற்கும் அயராது உழைத்தார். குறிப்பாக என். சி. எம்.எஸ்க்கு அவருடைய இறுதி நாள் ஆன 28-6-1971 வரை உழைத்தார். அன்று காலை (28-6-71) 8 மணி வரையில் அங் கத்தினர் விடுதி ரிப்பேர் விஷயமாக பேசிவிட்டு 8 -05க்கு திடீர் என்று உயிர் விட்டிருக்கிறார். அவரது கடைசி மூச்சுவரை சொசைட்டிக்கு அயராது உழைத்த ஓர் மாணிக்கம்.

ஆரியகவுடருக்கு பின் யார்? என்று தனது பத்திரிகை’மலைமலர்’யில் 1967-ல் திரு. கே.என். புல்லாகவுடர் விடுத்த கேள் விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

நம் பண்பாட்டை காத்துவந்த ஒரு பண்பாளர். ‘மாரிக்கு (மழைக்கு ) கைமாறு செய்ய இயலாது’. அதுபோல அன்னாரது சேவைக்கு கைமாறு காட்ட இயலாது. அவர் காட்டிய பாதையில் செல்வதும் அவர் தோற்றுவித்த கூட்டுறவு சங்கங்களை திறமை யாகவும், தூய்மையாகவும், நாணயத்துடன், காப்பது தான் நாம் செய்யும் கைமாறு, என்று கூறி அவருடைய சரித்திர சுருக்கத்தை முடிக்கிறேன்.
ராமனுக்கு ஒரு அணில் ஆரிகவுடருடன் ஒரு பெள்ளி 1927 முதல் அவருடன் பணி யாற்றியமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

இனி மேலும் அவர் வகுத்துச்சென்ற பாதையில் நடப்பது தான் என் கொள்கை.
வணக்கம் ஓம்சாந்தி

என். பெள்ளிகவுடர் மேலூர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீலகிரியின் முடிசூடா மன்னர் ஆரிகவுடர்

தொகுப்பு: A.காரி கவுடர்
(முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்/ஆணையாளர்)
பொது செயலாளர்,
பொரங்காடு சீமெ நல சங்கம்
தலைமையிடம் : கதவு எண் 17/157 C 10, ஹோப்பார்க், கோத்தகிரி அஞ்சல், நீலகிரி மாவட்டம் – 643 217. தமிழ்நாடு. (தன்னார்வத் தொண்டு நிறுவனம் (N.G.O) பதிவு எண்153/2002

(இந்தக் கட்டுரை இன்றைய இளைய சமுதாயம் அறிந்துக் கொள்ளவும், சமுதாய முன்னேற்றத்தில் மற்றும் மேம்பாட்டில் அக்கரையும், ஆர்வமும் கொண்ட நல்ல பரந்த உள்ளம் படைத்த செல்வந்தர்கள் முன்வர வெண்டுமென்பதற்க்காக)

படுகர் சமுதாயத்தின் மாபெரும் ஒப்பற்றத் தலைவர் அமரர் ராவ்பகதூர் H.B ஆரிகவுடர் அவர்களை பற்றி அறிவோமா?

4.12.1893 முதல் 28.6.1971 வரை சுமார் 78 ஆண்டுகள் நலமோடு வாழ்ந்தவர்

பெற்றோர் – ராவ்பகதூர் எச், ஜே,பெள்ளி கவுடர் திருமதி லட்சுமி நஞ்சம்மாள்

Rao Bahadur HJ Bellie Gowder & Mrs.Lakshmi Nanji ammal

உடன் பிறப்புகள்

திருவாளர்கள் ஹால்துரை, போஜன், ராஜு ஜோகி, திருமதி ஐடியம்மாள்

,

Ari Gowder’s only siste Mrs.Idyammal Bellie Gowder

திருமதி ஐடியம்மாள்

Ari Gowder’s brother Halldorai and sister Idyammal

Ari Gowder’s brothers Boja Gowder & Raju Gowder

Ari Gowder (with turban) with brother H B Joghee Gowder, (husband of First Badaga woman Graduate and First Badaga MP (Member of parliament Akkama Devi) and sister B.Idyammal Bellie Gowder. Photo taken on 29 May 1965.

Ari Goder’s sister in law Mrs.Akkama Devi Joghee Goder. First Badaga woman graduate & First Woman MP (Member of Parliament) from the Nilgiris

மனைவி – கௌரியம்மாள்

மகன் – திரு.A.போஜராஜ்

திரு.H A.போஜராஜ்

இவர் செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர்.

படுகரில் முதல் B.A., பட்டதாரி

கட்சி சாரா அரசியல் வாதியாகவும்,
மக்கள் பிரதி நிதியாகவும், சொற்பொழிவாளராகவும். சீர்திருத்த தலைவராகவும், சிறந்த பொது நல தொண்டராகவும் இருந்தவர்.

கண்ணியம், நேர்மை, விடாமுயற்சி, கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு அவர் உரைவிடமாக திகழ்ந்தவர்.
சமுதாயத்திற்கும், படுகுமக்களுக்கும், அமரர் ஆரிகவுடர் அவர்கள் கலங்கரை விளக்குப் போல் இருந்து நல்வழி காட்டி வந்தார்.

உறங்கி கிடந்த படுகு சமுதாயத்தை தட்டி எழுப்பி, தலை நிமிர்ந்து, வீர நடைபோடச் செய்தவர்.
தன்னலம் பேணாது பிறர் நலம் பேணிய பெருந்தலைவர் ஆவார்.

பண்பட்ட ஒழுக்க நெறியாளர், சீர்த்திருத்தச் சிந்தனையாளர், இனமான உணர்வு நிரம்பியவர், பேச்சில் இமியளவும் இழிவான வன் முறை காண முடியாது.

படுகு சமுதாயம், படுகு மொழியின் பால் அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது ஆகும். சமுதாய மக்களிடம் பேசும் பொழுது, ஆங்கிலம் மற்றும் தமிழ் வார்த்தை கலந்து வராமல் படுகு மொழியில்தான் பேசுவார்.

சமுதாயத்தில் தலைதூக்கிவரும் தீய பழக்கங்கள், சமூக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் தடங்கல்கள் ஆகியவைகளை வன்மையாக கண்டித்தவர்.

‘கவுடர்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட பெருந்தலைவர். அவர் ஆற்றிய சிறந்த சேவையால் தான் ‘கவுடர்’ என்ற கௌரவ பட்டம் அவருக்கு கிடைத்துள்ளது.

மிகவும் பின்தங்கியிருந்த படுகர் இனம் உயரபாடுபட்டவர்.

குடிப் பழக்கம் சமுதாயத்தை விட்டு விலக பெரும் பணி ஆற்றியுள்ளார்.

காலஞ்சென்ற பைகமந்து ஹைக்கெ மாத்தி . ஜோகி கவுடரை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி, நல்ல கருத்துள்ள பாட்டுகள் மூலமாக மது அரக்கனைப்பற்றி விளக்கச் செய்து, குடிப்பழக்கத்தை அறவே நிறுத்த பெரும் பாடுபட்டார்.

1919 ல் குடிப்பழக்கம், உழைப்பின்மை, ஊதாரித்தனமாக சிலவு செய்தல் போன்ற குறைகள் சமுதாய வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்பதை நாக்கு பெட்டா முழுமையும் சுற்றிச், சுற்றி பிரசாரம் செய்தவர் சிக்கனத்தை வலியுறுத்தியவர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்.

1924-ல்நீலகிரி மலைவாழ் படுக இன மக்களின் கடன் சுமையை அரசே ஏற்கும்படி செய்தவர்.

குறிக்கோளில்லாமல்கெட்டு அலையும் படுக சமுதாயத்தை திருத்த பெரும்பாடுபட்டவர்.

திருமணம், சாவு சடங்குகளுக்கு பெருமளவில் செலவழிப்பதை வன்மையாக கண்டித்தவர். இது சம்பந்தமாக பலசீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்.

சமூகத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படை நம் இளைஞர்களின் கல்வியே ஆகும் என்பதனை நன்றாக உணர்ந்து தன் தந்தை வள்ளல் எச்.ஜே. பெள்ளி கவுடர் நினைவாக உபதலையில் சொந்தமாக நிறுவிய உயர்நிலை பள்ளி (District Board High School) -க்கு நூலகம், ஆய்வுக்கூடம், பிற வசதிகள் அனைத்தும் செய்துள்ளார். சமுதாய மூத்த தலைமுறையினர் கல்வி கற்று பல துறைகளில் சிறந்து விளங்க செய்தார்.

பண நெருக்கடியினால் குறைந்த விலைக்கு கொஞ்ச நஞ்ச பூமியை சிலர் விற்பதை விரும்பாதவர்.
\

1942 – ல் அமரர் ஆரிகவுடர் படுக சமுதாயத்திற்கு ஆற்றிய அரும் பணியை பாராட்டி, ஆங்கில அரசால் ராவ்பகதூர் பட்டம் வழங்கப்பட்டது.

சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பே நீலகிரி மாவட்டத்தில் மது விலக்கு சட்டத்தை அமுலாக்கிய காரணகர்த்தர்.

1927-ல் மாவட்ட கூட்டுறவாளர்களின் மாநாட்டை உபதலையில் நடத்தியவர்.

1929-ல் மலைவாழ் மக்கள் மாநாட்டை உபதலையில் நடத்தியவர்.

அடிக்கடி நாக்குபெட்டா கூட்டங்களை கூட்டி, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டவர். நாக்கு பெட்டா கூட்டங்கள் ஏற்படக் காரண கர்த்தாவாக திகழ்ந்தவர்.


உருளை கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை எப்படியாவது நீக்க வேண்டுமென்ற நோக்குடன் 08.12.1935 ல் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தை ஆரம்பித்தவர்.

இன்று என்.சி.எம்.எஸ். அமரர் ஆரிகவுடர் உருவமாகவே திகழ்கிறது.

1925 முதல் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் தேயிலை வளர்ச்சிக்கு ஆவண செய்தவர்.

1938 முதல் வாழ் நாள் இறுதி வரை சென்னை மாகாண பிற்பட்டோர் நலசங்கத் தலைவராக இருந்தவர்.

1945-ல் ரோவர்ஸ் என்ற இளைஞர் அணியை ஏற்படுத்தி, சமுதாய ஒற்றுமைக்கு ஊட்டியில் வியக்கத்தக்க அளவில், ஒரு மாபெரும் பேரணியை நடத்தி காட்டியவர்.

பெண்ணினத்தின் பெருமைகளைப் பேசிப் பேசிப் பெரு நிலையை அவர்கள் வாழ்வில் காணச் செய்தவர்.

1955-ல் உதகையில் அரசினர் கலைக் கல்லூரி அமைக்க அரும்பாடுபட்டு வெற்றி பெற்றவர்.

ஜில்லா போர்டில் 25 ஆண்டு காலம் தலைவராக இருக்கும் பொழுது, நீலகிரியின் எல்லா ஹட்டிகளுக்கும் செல்லும் சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செம்மைப்படுத்தியவர்.

சுமார் 65 வருடங்களுக்கு முன்பே “எரிகி ஹொலக மொல பந்துண்டடதே” என்று சமுதாயத்திற்கு எச்சரிக்கை விடுத்தவர்.

நீலகிரி ஜில்லா சாரணர் இயக்கத் தலைவராக 25 ஆண்டுகள் இருந்தவர் 1923 முதல் 1946 வரை சுமார் 23 ஆண்டுகள் தொடர்ந்து M.L.C. ஆக இருந்தவர்.

1930 முதல் 1946 வரை நீலகிரி நில அடமான வங்கியின் தலைவராக இருந்தவர்.

1929 முதல் 1971 வரை சிறு தேயிலை தோட்ட விவசாயிகள் நலம் காக்கும் சங்கம் உருவாக்கி, அதன் தலைவராக இருந்தவர்.

1951-55 வரை M.L.A. ஆக இருந்தவர்
.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல் மந்திரி C. ராஜ கோபாலச்சாரி அவர்கள் அமரர் ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களை நீலகிரியின் “முடிசூடா மன்னர்” (Uncrowned King of the Nilgiris) என்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் திரு. லோபோ பிரபு அவர்கள் “The flower of humanity” கருணை நிறைந்த மானிட ஜாதி என்றும் சொல்லியுள்ளார்கள்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்,
தோன்றலின் தோன்றாமை நன்று’
என்ற வள்ளுவர் வாக்கிற்கு இலக்கணம் வகுத்தவர் – ஆரிகவுடர்.
\

கவுடரைக் கண்டால் ரயில் கூட நிற்கும்…!
புளு மவுண்ட்டன் எக்ஸ்பிரஸ் மலைப்பாதையில் மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும். அப்போது அந்தவழியே வாக்கிங் செய்தபடி வரும் ஆரிகவுடரை கண்டதும் ரயில் வண்டி அந்த இடத்திலேயே நின்று விடும். எஞ்சின் டிரைவரும் மற்ற ஊழியர்களும் இறங்கி கவுடருக்கு மரியாதை செலுத்திய பிறகு வண்டியில் ஏறி பயணத்தை தொடருவார்கள்.

ஒரு தனி மனிதருக்காக ரயில் வண்டியே நிற்கும் அளவுக்கு பெருமைக்குரிய நபராக விளங்கியவர், உலக அளவில் ஆரிகவுடர் ஒருவர்தான் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள் !….

நம் சமூகத்தின் பெரும் தலைவராக விளங்கிய ராவ்பகதூர் ஆரிகவுடர் விட்டுச் சென்ற இடம் கடந்த 34 ஆண்டுகளாக சூன்யமாகவே உள்ளது என்பதே இன்றைய உண்மை நிலை.

இந்த உயர்ந்த இடத்தை பூர்த்தி செய்யவும், சமுதாயத்தை காப்பாற்றவும், தொண்டுள்ளமும் சேவை மனப்பான்மையும் கொண்ட, கவுடரை போன்று தன்னலம் கருதாது பொதுநலம் பேணும் தலைவர் ஒருவர் தோன்ற ஹெத்தையம்மன் அருள் புரிந்து வழிகாட்ட வேண்டுகிறோம்.

Ari Gowder with wife Gowri (from Jakkadha Village). Wedding (1921?) photo enhanced with AI Original below

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

HBAG paame 1

HJBG

HBAG paame 2

HBAG paame 3

HBAG paame 4

HBAG paame 5

HBAG paame 6

Bygemandhu Joghee Gowder, popularly known as Hyka Maathi – Horse man, Ari Gowder’s righthand man

For more pictures and to read ‘All about Ari Gowder’, go 

here

Ari Gowder2

Ari Gauda
From the book ” A BADAGA – ENGLISH DICTIONARY ” by Prof.Paul Hockings and Christiane Pilot-Raichoor

 

English: A view of the Legislative Assembly of...

The story of Ariya Gowda

by Sriram V [The HinduChennai, May 1, 2012]

Ari Gowder was President of the Backward Classes League and leaned towards the Justice Party

The chances of anyone travelling down Ariya Gowda Road in West Mambalam, and stopping to wonder about the identity of the man who gave the thoroughfare its name, are slim. For when you are on Ariya Gowda Road, you are focused on getting out of the road alive, given its traffic.

He was not Ariya Gowda. He was HB Ari Gowder, a great visionary and leader of the Badaga community of the Nilgiris. And his life, as gleaned from various sources, including a 1935 Who’s Who and the internet, makes for interesting reading.

Rao Bahadur Hubbathalai J Bellie Gowder, made his fortune in laying the tracks of the Nilgiri Mountain Railway, which was completed in 1908. His wealth made him a leading member of his community, and his clansmen came to him for advice on several issues. Bellie Gowder founded a free school in his native village, Hubbathalai, an institution that still functions. He passed away in 1935.

Bellie Gowder’s son, Ari, was born in 1893. His father ensured that he was educated in the modern sense and he graduated from Madras Christian College. Though he was to consider himself a contractor and a planter, it was in politics and social uplift that Ari Gowder was to make a mark. In 1923, he became the first Badaga to be elected to the Madras Legislative Council of which he was a member until 1934. In the 1940s, he was elected to the Madras Legislative Assembly. When the Rajaji government introduced Prohibition in 1937, he led the challenge of enforcing it in the Nilgiris, of which area he was also the first non-official to become District Board President. Ari Gowder was also active in the Scouts Movement. Another contribution of his was the establishment of the Nilgiris Cooperative Marketing Society, which eliminated the stranglehold middlemen had over the simple mountain people. He was also a Director of the Badaga Land Mortgage Bank.

While the sympathies of most of his community lay with the Congress, Ari Gowder, given that he was President of the Backward Classes League, leaned more towards the Justice Party, which was active till the 1930s. That probably explains the road in Mambalam being named after him. Neighbouring Theyagaroya Nagar or T Nagar, developed in the 1920s when the Justice Party was in power and most of the roads, parks and streets there are named after its leaders. Legend also has it that a large chunk of land adjoining the Mambalam Railway Station was his, which he donated for developmental work. Like his father, Ari Gowder too received the title of Rao Bahadur from the British Government, in 1943.

In 1946, Ari Gowder was defeated in the Assembly elections. But in 1952 he contested successfully as an independent. He was to remain an independent for the rest of his career. He passed away in 1971.

How did Ari Gowder Road morph into Ariya Gowda Road? And should it not be just Ari Road?

The Hindu : Cities / Chennai : The story of Ariya Gowda.

12 responses to “Rao Bahadur H B ARI GOWDER, the undisputed Badaga leader

  1. ARI GOWDER Ayyah,,,,,,,,,,,,,,,,,,,,, THE ICONIC LEGEND OF BADAGA COMMUNITY

    Like

  2. Pingback: Homage to H.B.Ari Gowder | Badagas of the Blue Mountains

  3. kannada kulture's avatar kannada kulture

    HI I AM KANNADIGA I AM VERY INTERESTED IN BADAGA LANGUAGE PLEASE ANYBODY HELP ME..

    Like

  4. Did you know the first Member of Parliament of the Nilgiris District…N.M. Lingam, a best friend of Pandit Jawaharlal Nehru and a great freedom fighter…the first person to be in the World Congress Meet in New York. Proudly speaking, he is my grand father. Many dont know much about him because he passed away in the year 1970….He has contributed a lot to the badaga community and the people of Nilgiris…He was from Nanjanad…Let me know if I can send you his photo…you can write more about him…if interested

    Like

    • The best friend of Pandit Nehru should have done a lot to the community especially in the Nilgiris, obviously he should have been a close friend to Lord Mountbatton also, great personality indeed please put up his photo for us to see.
      Ari Gowder

      Thank you very much for your sentiments. There is a separate page on Ari Gowder and many links with lots of photos – Wg Cdr JP

      Like

  5. Pradeeshnarayan's avatar Pradeeshnarayan

    It’s a wonderful history …I would like to know more, I like to visit the place…can you clarify the different names of Badagas (vadugs,vadukar,vadukan,vaduva), has it had any connection or similarity? [ cell # 09677156989]

    Though Badaga means northerner [a person from the north], the others names you have mentioned, though similar in sound and [may be] meaning, has got nothing to do with the Badagas of the Blue mountains – the Nilgiris, a small district of Tamil Nadu bordering Kerala and Karnataka – JP

    Like

  6. g.thiagarajan(abirami tea)'s avatar g.thiagarajan(abirami tea)

    Great to be born and brought up in Coonoor and to happily live along with the GREAT BADAGA COMMUNITY.

    Like

  7. I have seen my great grandfather(kollu thaatha) Rao Bahadur H.J.Bellie Gowder’s picture for the first time, thanks to this website.

    Like

  8. Dr. Dhesingh Sivaraj's avatar Dr. Dhesingh Sivaraj

    First time seeing this web site.
    Highly worthfull contribution and greet service. keep it up. god bless you all

    Like

  9. KRISHNA RAJ.P.H (TIRUPUR BADUGA ASSOCIATION)'s avatar KRISHNA RAJ.P.H (TIRUPUR BADUGA ASSOCIATION)

    I am really touched by this website.I often thought that Rao Bahadur H.B.Ari Gowder’s contribution to the Baduga Community should be always in the mind and heart of the Baduga and we had to come forward with a website like this.The photos gave me joy and tears.Thank you so much.

    Thank you very much for your kind words -JP

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.